நகை கடையில் திருடிய மூதாட்டிகள்
நகை கடையில் வெள்ளி கொலுசுகள் திருடிய மூதாட்டிகள் சிசிடிவி காட்சிகள் கொண்டு காவலர்கள் விசாரணை;
தருமபுரி மாவட்டம் அருகே உள்ள நகைக்கடையில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இரு பாட்டிகள் கால் கொலுசு வாங்குவது போல் நகை கடைக்காரரிடம் பேசிக்கொண்டு கொலுசை திருடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடை உரிமையாளர் புகாரளித்தன் பேரில், நகர காவலர்கள் உடனடியாக விசாரணை தொடங்கி, கடை அமைந்துள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இருவர் அடையாளங்கள் கண்டறிந்து தேடும்பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவ தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.