ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்;
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊராட்சிகளில் பணிபுரியும் ஆபரேட்டர்கள் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய், காலம் முறை ஊதியம் வழங்க கோரியும், குறைந்தபட்ச ஊதிய அரசாணை ஓ எச் டி ஆபரேட்டர்களுக்கு வழங்கிட கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் தவக்குவார் மாரியப்பன் மோகனா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர், உள்ளாட்சி சம்மேளன மாநில தலைவர் கே ஆர் கணேசன், சிஐடியு மாவட்ட செயலாளர் ஜெயசீலன் சிறப்புரையாற்றினர். மேலும் இந்நிகழ்வில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.