வார சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்
கம்பைநல்லூர் வாரச்சந்தையில் 28 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை;
கம்பைநல்லூர் பகுதியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக சிறப்பு வார சந்தை நடைபெறும் வழக்கம் நேற்று நடைபெற்ற வார சந்தையில் தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு வெளி மாவட்டங்களில் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். ஆடுகள் ரூ.5000 முதல் ரூ.9700 வரை என நேற்று ஒரே நாளில் 28 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்