தர்மபுரியில் தொடர் மழையால் நிரம்பிய ஏரி
தர்மபுரி அருகே தொடர் மழையால் ஏ.ஜெட்டிஹள்ளி ஏரி நிரம்பியது;
தர்மபுரி மாவட்டம் ஏ.ஜெட்டிஹள்ளி ஏரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரி மூலம் 14 கிராமங்கள் பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரம் பெறுகின்றனர் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக சுற்றுவட்டாரங்களில் பொழிந்த கனமழையின் காரணமாக நேற்று மாலை ஏஜெட்டில் ஏறி நீர் நிரம்பி அதிகப்படியான நீர் ஏரிக்கோடி வழியாக வழிந்து ஓடியது இதனால் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்