கோவை: தி.மு.க-விற்கு சந்திராஷ்டம் – வினோத் பி. செல்வம் விமர்சனம் !
திமுகவுக்கு எதிராக தொடர்ந்து வந்த நீதிமன்ற தீர்ப்புகள்.;
கிட்னி திருட்டு, திருப்பரங்குன்றம், கரூர், ஆம்ஸ்ட்ராங் மரணம் உள்ளிட்ட வழக்குகளில் தி.மு.க அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தொடர்ச்சியாக தீர்ப்புகள் வழங்கி வருவது தி.மு.க-விற்கு சந்திராஷ்டம் போல் அமைந்துள்ளதாக பா.ஜ.க மாநில செயலாளர் வினோத் பி. செல்வம் தெரிவித்தார். கோவை வடவள்ளியில் தி.மு.க அரசை கண்டித்து பா.ஜ.க சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசினார். தி.மு.க ஆட்சியில் ஒவ்வொரு துறையும் தோல்வியடைந்து வருவதாகவும், சுகாதாரத் துறையின் செயல்பாடு மோசமாக இருப்பதாகவும் விமர்சித்தார்.