கோவை அவிநாசி சாலையில் கார் தீப்பிடித்து பரபரப்பு !
அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு கீழ் திடீரென காரில் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
கோவை, அவிநாசி சாலை பழைய மேம்பாலத்திற்கு கீழ் சென்ற கார் ஒன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. வடகோவையில் இருந்து வந்த கார் மேம்பாலத்தின் கீழ் சென்றபோது, அதன் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியது. இதனை கவனித்த ஓட்டுநர் உடனே காரை நிறுத்தினார். பின்னர் சில நிமிடங்களில் கார் முழுவதும் தீப்பிடித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.