புரட்டாசிசனி பெருமாள் கோவிலில் நீண்டவரிசையில் நின்று வழிபாடு

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த வைகுண்டபதி பெருமாள் கோயிலில் பெருமாள் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்றபடி தரிசனம் செய்து வருகின்றனர்;

Update: 2025-10-11 05:50 GMT
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த வைகுண்டபதி பெருமாள் கோயிலில் பெருமாள் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்றபடி தரிசனம் செய்து வருகின்றனர் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும் அதுவும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் வைணவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமையான வைகுண்டபதி பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை நாலு முப்பது மணி அளவில் நடை திறக்கப்பட்டுமுதலில் கோ பூஜையும் பின்னர் விசுவ ரூப தரிசனமும் நடைபெற்றது இதைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருப்பதியில் காட்சியளிப்பது போன்று வெங்கடாசலபதி அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார் வெங்கடாசலபதி அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் இன்று அதிகாலை முதல் வைகுண்டபதி பெருமாள் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றபடி பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் புளியோதரை தயிர் சாதம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனைப்படி பெருமாள் கோவில் அறங்காவல குழு தலைவர் ஏசி செந்தில் குமார், கோவில் நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி, பெருமாள் கோவில் பட்டர் மற்றும் கோவில் அறங்காவல குழு உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Similar News