பொள்ளாச்சி கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு !

நடத்தையில் சந்தேகம்: நடுரோட்டில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்.;

Update: 2025-10-11 06:25 GMT
கோவை, பொள்ளாச்சியில் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன், தன் மனைவி ஸ்வேதாவை (26) நடுரோட்டில் கத்தியால் குத்திக் கொலை செய்தார். பெயிண்டிங் தொழிலாளி பாரதி (29) என்பவர், ஒரு மாதமாகப் பிரிந்து வாழ்ந்த தனது மனைவி ஸ்வேதாவை அவர் பணிக்குச் செல்லும் வழியில் வழிமறித்து இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ளார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சம்பவ இடத்திலேயே பலியான ஸ்வேதா. கொலையை நேரில் பார்த்த பொதுமக்கள் பாரதியை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் குறித்த சி.சி.டி.வி மற்றும் செல்போன் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி கிழக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News