குடிபோதை கும்பல் வெறிச்செயல்: கண்டித்த ஆட்டோ ஓட்டுநரை காரில் இழுத்துச் சென்றனர்!

சரக்கு ஆட்டோ ஓட்டுநரை இரும்புக் கம்பியால் தாக்கி, காரில் இழுத்துச் சென்ற குடிபோதை இளைஞர்கள் - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.;

Update: 2025-10-11 06:41 GMT
கோவை சிங்காநல்லூரில், மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிச் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பல், இதைக் கண்டித்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் சுடலைமுத்து மீது இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கியது. தாக்குதலுக்குப் பிறகு, ஆட்டோ ஓட்டுநர் சுடலைமுத்து காரை மறிக்க முயன்றபோது, அவரது கழுத்தைப் பிடித்துத் தரதரவென சாலையில் இழுத்துச் சென்று கொலை செய்ய முயன்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சுடலைமுத்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆட்டோ ஓட்டுநரை காரில் இழுத்துச் செல்லும் அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Similar News