கோவை: கவரிங் நகைப் பறிப்பு - கைவரிசை மர்ம நபர்களுக்கு வலை
பொள்ளாச்சி அருகே கவரிங் நகைகளைப் பறித்த மர்ம நபர்கள்.;
பொள்ளாச்சி அருகே நேற்று சாலையில் நடந்த சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த மர்ம நபர்கள் நகைகளைப் பறித்துச் சென்றனர். விசாரணையில், அவை தங்க நகைகள் அல்ல, கவரிங் நகைகள் எனத் தெரியவந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஆனைமலை போலீஸார், சிசிடிவி உதவியுடன் தனிப்படை அமைத்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.