கோவை–அவினாசி சாலை மேம்பாலம் பொதுமக்களுக்கு திறப்பு - பொது மக்களுக்கு இனிப்பு வழங்கிய எஸ்பி வேலுமணி !
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி.;
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.1,621 கோடியை ஒதுக்கிய கோவை–அவினாசி சாலை மேம்பால பணியை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 55% வரை முன்னேற்றியதாக தெரிவித்தார். 10.1 கி.மீ. நீளமான மேம்பாலம் கோல்டுவின்ஸில் இருந்து உப்பிலிபாளையம் வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க.வினர் உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்களுடன் நேரடியாக வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். அதோடு அதிமுகவினருடன் மேம்பாலத்தில் பயணம் செய்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.