இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை
குமாரபாளையத்தில் இளம்பெண் மாயமானார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.;
குமாரபாளையம் உடையார்பேட்டை பகுதியில் வசிப்பவர் மோனிகா, 23. ஈரோடு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் காலை 07:00 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றாவ்ர் இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து . இவரது தந்தை வேலுமணி குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், இவர் வேலைக்கு சென்ற இடத்தில் சதீஷ் என்பவருடன் பழகி வந்ததாக தெரியவந்தது. மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்