மின்சார வாரியத்தில் காலிப் பணியிடங்கள் நிரப்ப கோரிக்கை
தூத்துக்குடியில் தமிழ்நாடு பவர் இன்ஜினியர் சங்க மாநில மாநாடு – மின்சார வாரியத்தில் காலிப் பணியிடங்கள் நிரப்ப கோரிக்கை;
தூத்துக்குடியில் தமிழ்நாடு பவர் இன்ஜினியர் ஆர்கனைசேஷன் ஏழாவது மாநில மாநாடு மாநில பொதுச் செயலாளர் அருள் செல்வன் தலைமையில் நடைபெற்றது இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மின்சார வாரியத்தில் பணிபுரியும் பொறியாளர்கள் உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர் இந்த மாநாட்டில் தமிழகத்தில் மின் நுகர்வோர் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இதற்கு அடிப்படையான காரணம் மின்சார வாரியத்தில் உள்ள 65,000 காளி பணியிடங்களை நிரப்பாதது. மின்சார வாரியத்தில் அடிமட்டத்தில் உள்ள உதவியாளர்கள் மற்றும் கம்பியாளர்கள் பணியிடங்கள் சுமார் 30,000 காலியாக உள்ளது இதன் காரணமாக மின்வாரியத்தில் பணிபுரியக்கூடிய பொறியாளர்கள் அதிகாரிகள் மக்கள் சேவையை செய்வதில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள் எனவே தமிழக அரசு மின்சார வாரியத்தில் இருக்கிற அடிப்படை பதவிகளான பல உதவியாளர் மற்றும் கம்பியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் சமீபத்தில் தமிழக அரசு மின்சார வாரியம் 1851 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதாக அறிவித்துள்ளார்கள் இது போதுமானதல்ல மேலும் தமிழக மின்சார வாரியத்தில் அடிமட்ட பணியில் 9000 கேங்மேன் பணியாளர்கள் உள்ளனர் அவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணிக்கு மாறாக கள் உதவியாளர் பணிக்கும் கம்பியாளர் பணிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள் எனவே அந்தப் பணியாளர்களை எல்லாம் கள உதவியாளர்கள் பணிக்கு பணி மாற்றம் செய்தால் மின்சார வாரிய பணிகளை சிறப்பாக செய்வதற்கு வசதியாக இருக்கும் எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தற்போது தமிழக அரசு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசு தனியார் வசம் வழங்கியிருக்கிறது இதன் மூலம் 21 விதமான பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக மின்சார வாரியத்திற்கும் மின் நுகர்வோர்களுக்கும் தமிழக மக்களுக்கும் தொடர்பு இல்லாத நிலை ஏற்படும் தனியார் முழுமையாக மின் விநியோகத்தை கவனிக்கும் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவே தமிழக அரசு கேரளாவில் உள்ளதை போன்று ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அறிவித்து அரசின் கட்டுப்பாட்டில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தனியாரிடம் ஒப்படைக்காமல் கேரளா போன்று செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கிறோம் அதே போன்று 2023 ஆம் ஆண்டு முதல் மின்சார வாரிய ஊழியர்கள் பொறியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் மின்சார வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரியக்கூடிய ஒப்பந்த தொழிலாளர்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வோம் என்ற திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி உடனடியாக அடையாளம் கண்டு ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் தினக்கூலியாக ரூபாய் 250 ரூபாய் வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்றைக்கு தமிழகத்தில் மின் கொள்முதல் தனியாரிடம் இருந்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது புதிதாக மின் நிலையங்களை அமைத்திருந்தால் இந்த சூழ்நிலை இருந்திருக்காது தனியாரிடம் கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை இருக்காது. ஐந்து மின் திட்டங்கள் கிடப்பிலே போடப்பட்டுள்ளன எனவே புதிதாக அறிவிக்கப்பட்ட மின் நிலைய திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன