ஒட்டன்சத்திரம் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற பூத் ஏஜெண்டுகள் ஆலோசனைக் கூட்டம்

இன்னும் ஆறு அமாவாசைகள் தான் உள்ளது. நிர்வாக திறனற்ற ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். ஒட்டன்சத்திரம் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற பூத் ஏஜெண்டுகள் ஆலோசனைக் கூட்டத்தில் கழக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்;

Update: 2025-10-12 07:11 GMT
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு , மேற்கு ஒன்றிய மற்றும் நகர கழகம் சார்பில் பூத்கள் வாரியாக வாட்ஸ் அப் குழுக்கள் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் ஒன்றிய கழக செயலாளர்கள் நடராஜன் ஏற்பாட்டில் கழக பொருளாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்து ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றுகையில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என சூறாவளியாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். கிட்டத்தட்ட 173 தொகுதிகளுக்கு மேலாக அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எழுச்சியோடு வரவேற்று வருகின்றனர். இதனைப் பார்க்கையில் 2026 ல் தமிழக மக்கள் திமுக ஆட்சியினால் அவதிப்பட்டு வருகின்ற நிலையில் இந்த கொடுங்கோல் ஆட்சி மாறவேண்டுமானால் அண்ணா திமுக தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஏக மனதாக பொதுமக்களும் தாய்மார்களும் தீர்மானித்து விட்டனர். இன்னும் ஆறு அமாவாசைகளை உள்ள நிலையில் பொதுமக்கள் விவசாயிகள் எடப்பாடிக்கு பழனிச்சாமி அவர்கள் தான் தமிழக முதல்வராக வரவேண்டும் என தீர்மானித்து விட்டனர். 2026 ல் எம்ஜிஆர், அம்மாவின் வழியில் வந்த எடப்பாடியார் தலைமையில் கழக ஆட்சி அமைவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது இவ்வாறு கழக பொருளாளரும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். இதனைத் தொடர்ந்து கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு திமுக ஆட்சியின் அவலங்கள் மற்றும் ஆட்சியின் சாதனைகளும் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் வாட்ஸ் அப் செயலி எப்படி பயன்படுத்துவது என்பதற்கான விளக்கத்தையும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல் தொழில்நுட்ப பிரிவு தேர்தல் பொறுப்பாளர்களுடன் இணைந்து செயல்படுத்தி காட்டினார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மாணிக்கம், கவி செல்வம் தங்கம், செல்வகுமார் மற்றும் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Similar News