கோவை: அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் கலைத் திருவிழா !

மாணவர்களின் திறமைகள் வெளிப்பட்ட கலைவிழா – பாடல், நடனம், பறை இசை என களைகட்டிய கல்லூரி வளாகம்.;

Update: 2025-10-12 08:12 GMT
கோவை அவிநாசி சாலை கொடிசியா அருகே உள்ள அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் கலைத் திருவிழா உற்சாகமாக நடைபெற்றது. மாணவர்களின் கலை மற்றும் இலக்கிய திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இவ்விழாவில், கல்லூரி முதல்வர், “தொழில்நுட்ப அறிவோடு கலை நுணுக்கமும் இணைந்தால் தான் முழுமையான ஆளுமை உருவாகும்” என கூறினார். தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஓவியம், பாடல், நடனம், நகைச்சுவை, கட்டுரை, மிமிக்கிரி, குறும்படம் உள்ளிட்ட 32 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மாணவர்களும் ஆசிரியர்களும் பாடல்கள் பாடி, பறை இசைக்கு ஏற்ப நடனமாடி உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.

Similar News