கோவை — அவினாசி புதிய மேம்பாலம் திறப்பு : உப்பிலிபாளையம் ரவுண்டாவில் கடும் போக்குவரத்து நெரிசல்

புதிய மேம்பாலம் திறப்பு மகிழ்ச்சி மத்தியில் — உப்பிலிபாளையம் ரவுண்டாவில் வாகன நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு.;

Update: 2025-10-12 08:16 GMT
கோவை, அவினாசி சாலையில் ரூ.1,791 கோடியில் கட்டப்பட்ட புதிய உயர்மட்ட மேம்பாலம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து உப்பிலிபாளையம் ரவுண்டா பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புதிய மேம்பாலத்தில் இறங்கும் வாகனங்கள் மற்றும் பழைய சாலை வழியாக வரும் வாகனங்கள் ஒரே நேரத்தில் ரவுண்டா பகுதியை நோக்கி திரும்பியதால் நீண்ட வரிசைகள் உருவாகி, வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து, போக்குவரத்து போலீசார் அண்ணா சிலை அருகே இறங்கும் தளத்தைப் பயன்படுத்துமாறு வாகனங்களை மாற்றி அனுப்பினர். மேம்பாலத்தில் வாகனங்கள் அதிவேகமாக செல்லாமல் 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்தி செல்ஃபி மற்றும் ரீல்ஸ் எடுப்பது தடைசெய்யப்பட்டு, இதை மீறுவோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

Similar News