யானைத் தாக்கி உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு நிவாரண நிதி – எம்.பி. ஈஸ்வரசாமி
கோவை மாவட்டத்துக்கு முதல்வர் சிறப்பு கவனம் செலுத்துவதாக எம்பி தகவல்.;
நரசிபுரம் பகுதியில் யானைத் தாக்கி உயிரிழந்த செல்வி என்ற பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி வழங்கினார். பின்னர் பேசிய அவர், தொண்டாமுத்தூர் பகுதியில் யானை நுழைவைத் தடுக்க ரூ.7 கோடி மதிப்பில் வேலி அமைக்கும் பணி தொடங்கப்பட இருப்பதாக கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் கோவை வனப்பகுதியில் 115 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போதைய அரசில் நான்கரை ஆண்டுகளில் 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இவ்வாண்டு (2024–25) 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கொரோனா காலத்திலிருந்து இதுவரை முதல்வர் அதிக முறை கோவைக்கு வருகை தந்து பல்வேறு நிவாரண, மேம்பாட்டு பணிகளை செய்து வருவதாகவும், அவிநாசி சாலை மேம்பாலம், டைட்டில் பார்க், குடிநீர் திட்டம் போன்ற பல திட்டங்கள் கோவை மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் தெரிவித்தார்.