ஒகேனக்கலில் நீர்வரத்து சரிவு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி 57,000 கனடியாக நீர்வரத்து சரிவு;
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பருவமழை காரணமாக காவிரி நீர்பிடிப்பு பொழியும் கனமழையால் 65,000 கன அடியாக இருந்த நீர்வரத்து அக்டோபர் 12, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் வினாடிக்கு 57,000 கனஅடியாக சரிந்துள்ளது. தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பீலிகுண்டலுவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.