சுடுநீர் வால்வ் தவறாக திறக்கப் பட்டதால் சுடுநீர் கொட்டியதில் வட மாநில தொழிலாளி பலி

குமாரபாளையத்தில் சுடுநீர் வால்வ் தவறாக திறக்கப் பட்டதால் சுடுநீர் கொட்டியதில் வட மாநில தொழிலாளி பலியானார்.;

Update: 2025-10-12 13:45 GMT
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பாச்சுராய், 30. வடமாநில கூலித் தொழிலாளி. இவர் குமாரபாளையம் பெராந்தர்காடு பகுதியில் இருந்த டையிங் ஆலையில் பணியாற்றி வந்தார். அக். 8, மாலை 06:30 மணியளவில் மெசின் அழுத்தத்தை குறைத்து வால்வை திறப்பதற்கு பதிலாக, அழுத்தத்தை குறைக்காமல் வால்வை திறந்து விட்டதால், அதில் இருந்த சுடு தண்ணீர் முழுவதும் பாச்சுராய் மீது கொட்டியது. இதனால் வலியில் துடித்த இவரை கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவர் சிகிச்சை பலனில்லாமல் நேற்று காலை 06:00 மணியளவில் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News