மான் வேட்டையாட முயன்றவர்கள் கைது
அரூர் வனச்சரகத்தில் மான் வேட்டையாட முயன்ற இருவர் கைது;
அரூர் வனச்சரக அலுவலர் அருண் பிரசாத் தலைமையில் வனத்துறையினர் நேற்று செல்லம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் கள்ளத் துப்பாக்கியை பயன்படுத்தியும், கம்பிவலை அமைத்தும் மானை வேட்டையாட முயன்ற கெளாபாறை கிராமத்தைச் சேர்ந்த ராமன் (58), ஏழுமலை (31) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் இப்படி நடக்க கூடாது என்று எச்சரித்தனர்..