மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கிய மாநில தலைவர்

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்;

Update: 2025-10-13 03:13 GMT
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மாட்டுச்சந்தை அருகில் அமைந்துள்ள டேக்வாண்டோ ட்ரைனிங் சென்டரில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு நேற்று பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி உடன் இருந்தார்.

Similar News