லயன்ஸ் கிளப் சார்பில் மத நல்லிணக்க தீபாவளி விழா

திண்டுக்கல் திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி திருமண மஹாலில் லயன்ஸ் கிளப் சார்பில் மத நல்லிணக்க தீபாவளி விழா கொண்டாடப்பட்டது;

Update: 2025-10-13 05:06 GMT
திண்டுக்கல் காஸ்மாஸ் லயன் சங்கம் சார்பில் சமய நல்லிணக்கத்தோடு கூடிய தீபாவளி திருநாள் கொண்டாட்டம் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி திருமண மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொருளாளர் சையது சூரஜ் முன்னிலை வகித்தனர். முதன்மை மாவட்ட ஆளுநர் அறிவழகன், திண்டுக்கல் ஏரியா பவுண்டேஷன் தலைவர் மீனாட்சி சுந்தரம், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டீபன், சௌமியா கான்ஸ்ட்ரக்சன் சிவமணிகண்டன், ஜி டி என் கல்லூரி பேராசிரியர் பாத்திமா பேகம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தீபாவளி பண்டிகையை அனைவரும் கொண்டாடும் விதமாக ஏழை எளியவருக்கு சேலைகள் மற்றும் விவசாயிகளுக்கு புத்தாடைகளை புரவலர் திபூர்சியஸ், அக்ஷயா மருத்துவமனை நிறுவனர் பிரபு, ஹிரன்யா பைனான்ஸ் நிஷா பாலு ஆகியோர் வழங்கினர்.

Similar News