மாணிக்கவாசகர் சிலையை திருடி விற்க முயன்ற இருவர் கைது.

மதுரை உசிலம்பட்டி அருகே மாணிக்கவாசகர் சிலையை திருடி விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2025-10-13 05:35 GMT
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அடுத்த செல்லம்பட்டியில், சிலை கடத்தல் நடப்பதாக, திருநெல்வேலி சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இரு ரகசிய விசாரணையில் ஈடுபட்டபோது அங்கு வந்த டூவீலரை சோதனை செய்ததில், ஒரு அடி உயரத்தில், 3 கிலோ எடையுள்ள மாணிக்கவாசகர் உலோக சிலை இருந்தது. டூவீலரில் வந்த உசிலம்பட்டி, வெள்ளிக்காரப்பட்டியை சேர்ந்த காசிமாயன்( 43) என்பவரிடம் விசாரித்ததில் கூட்டாளிகளான சோலை, வேல்முருகன், மதன் ஆகியோருடன் சேர்ந்து, உசிலம்பட்டி அடுத்த ஆனையூர், மீனாட்சி கோவிலில் இருந்து, மாணிக்கவாசகர் சிலையை திருடியது தெரிந்தது.பிறகு சிலையை விற்க பாப்பாபட்டி தவசி (65) என்பவருடன் சேர்ந்து, சிலை கடத்தல் கும்பலிடம் காசிமாயன் விற்க முயன்றபோது போலீசாரிடம் சிக்கினர், காசிமாயன், தவசி ஆகியோரை கைது செய்து, சிலைகளை பறிமுதல் செய்தனர்.

Similar News