சிகிச்சைப் பெறும் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்

திண்டுக்கல்லில் சிகிச்சைப் பெறும் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்;

Update: 2025-10-13 10:06 GMT
திண்டுக்கல் எஸ்பிசி சிறப்பு அகாதெமி பள்ளியைச் சோ்ந்த குழந்தைகள், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறவி வளைபாதத்துக்காக சிகிச்சைப் பெறும் 58 குழந்தைகளுக்கு இனிப்புகள், புத்தாடைகளைப் பரிசுப் பொருள்களாக வழங்கி தீபாவளி கொண்டாடினா். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் (பொ) வீரமணி, கண்காணிப்பாளா் சுரேஷ்பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மாணவா்களிடையே கருணை, பரிவு, சமூகப் பொறுப்புணா்வை வளா்ப்பதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக எஸ்பிசி அகாதெமி நிா்வாகம் தெரிவித்தது.

Similar News