கோவை: குளத்தில் கார் கவிழ்ந்து விபத்து !

மது போதையில் காரை குளத்தில் இறக்கிய கேரளா இளைஞர்களால் பரபரப்பு சம்பவம்.;

Update: 2025-10-13 11:45 GMT
கோவை மாவட்டம், சூலூர் கண்ணம்பாளையம் அருகே கேரளா பதிவு எண் கொண்ட கார் ஒன்று நேற்று இரவு குளத்தில் கவிழ்ந்தது. மதுபோதையில் இருந்த நான்கு இளைஞர்கள் காரில் இருந்தனர். அங்கு வந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் சூலூர் காவல்துறை கிரேன் உதவியுடன் காரை குளத்திலிருந்து வெளியே எடுத்தனர். நான்கு இளைஞர்களும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். சம்பவத்தில், காரில் ஆயுதங்கள் இருந்துள்ளதாக பொதுமக்கள் தகவல் வழங்கியதால் காவல்துறை காரை சோதனை செய்துக்விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News