கோவை புதூரில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

புதூர் தீயணைப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.;

Update: 2025-10-13 12:04 GMT
கோவை புதூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய வளாகத்தில் பொதுமக்களுக்காக தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்படும் சூழ்நிலைகளில் எவ்வாறு தன்னைத்தானே காப்பாற்றுவது, அவசர நேரத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்தும் முறை ஆகியவை குறித்து விரிவாக விளக்கப்பட்டது. நிகழ்ச்சியை கோவை புதூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையேற்று நடத்தினார். பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்று பயனடைந்தனர்.

Similar News