ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரையில் ஏழை எளியவருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது;

Update: 2025-10-13 12:55 GMT
மதுரை முனிச்சாலை நாடார் உறவின்முறை சார்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய பொது மக்களுக்கு தீபாவளி விழாவினை முன்னிட்டு பரிசு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ் விழாவிற்கு தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், காவல் உதவி ஆணையர் ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.. இவ் விழாவில், மாமன்ற உறுப்பினர் சையது அபுதாஹிர், உறவின்முறை தலைவர் அன்பரசன், செயலாளர் கனிராஜ் பொருளாளர் சூசை உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Similar News