சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (44). ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் அடிக்கடி குடித்துவிட்டு 2, 3 நாட்கள் கூட வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற வெள்ளைச்சாமி நேற்று (அக். 12) எரசக்கநாயக்கனூர் செல்லும் சாலையில் உள்ள பாலம் அருகே இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றி சின்னமனூர் காவல்துறையினர் விசாரணை.