கலெக்டர் அலுவலகத்தில் வழிகாட்டும் அலுவலர் தேவை

கோரிக்கை;

Update: 2025-10-13 13:11 GMT
தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 4 தளங்களில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்களுக்கு மனுக்கள் வழங்கவும், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளை சந்திக்கவும் அன்றாடம் ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலகங்கள் எங்கு உள்ளது எனத் தெரியாமல் சிரமம் அடைகின்றனர். பொது மக்களுக்கு உதவ வழிகாட்டும் அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News