அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் அழகுராஜா இவரது மனைவி ரம்யா. இவர்களது 11 மாத குழந்தை யஷ்வந்தன் நேற்று (அக். 12) மாலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். குழந்தையை பெற்றோர் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.