மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவர் தற்கொலை

குமாரபாளையத்தில் மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2025-10-13 13:31 GMT
குமாரபாளையம், அக். 14 குமாரபாளையம் குளத்துக்காடு பகுதியில் வசிப்பவர் ஞானசேகரன், 23. கூலி. இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு பிரிந்து செநேறு விட்டார். இதனால் குடிப்பழக்கத்திற்கு ஆளான இவர், தன் பெற்றோர் வசமும் தினமும் தகராறு செய்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் மாலை 01:00 ,மணியளவில் குடித்து விட்டு, தன் அம்மாவிடம் தகராறு செய்து விட்டு, வீட்டின் அறையில் சென்று கதவை தாளிட்டுக் கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை. கூப்பிட்டு பார்த்தும் பதில் இல்லை., இதனால் மாலை 05:00 மணியளவில் குழவிக்கல்லை கொண்டு கதவை உடைத்தனர். சிமெண்ட் அட்டை போடப்பட்ட வீட்டில், அட்டை குறுக்கே வைக்கப்பட்ட இரும்பு பைப்பில் சேலையால் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்தார். தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பார்த்த போது, இவரை பரிசோதித்த டாக்டர் , இவர் இறந்து விட்டதாக கூறினார்.

Similar News