கார் மீது டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயமடைந்தனர்.
குமாரபாளையம் அருகே கார் மீது டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.;
குமாரபாளையம், அக். 14 குமாரபாளையம் அருகே நாராயண நகர் பகுதியில் வசிப்பவர் பிரபாகரன், 23. கூலி. இவர் தன் நண்பன் ஒபுளியின் டூவீலரில், டூவீலரை இவர் ஓட்ட, இவரது நண்பர்கள் சந்தோஷ்குமார், 21, ஓபுளி, 19, அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர், பின்னால் உட்கார்ந்து வந்தனர். சேலம் கோவை புறவழிச்சாலை, கவுரி தியேட்டர் மேம்பாலம் மீது, நேற்று அதிகாலை 03:45 மணியளவில் வந்துகொண்டிருக்கும் போது, முன்னால் சென்ற டாட்டா டியாகோ காரின் ஓட்டுனர், எவ்வித சிக்னலும் காட்டாமல் திடீரென்று நிறுத்தியதால், வேகமாக வந்த டூவீலர், கார் மீது மோதியதால், முன்னாள் பஞ்சர் ஆகி நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டூவீலரில் வந்த மூவரும் பலத்த காயமடைந்தனர். குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அழைத்து வந்து டாக்டரிடம் காட்டிய போது, இவரை பரிசோதித்த டாக்டர், பிரபாகரன் இறந்து விட்டார் என்று கூறினார். மற்ற இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.