அரசு பள்ளிகளில் பனை விதைகளை வழங்கிய சமூக ஆர்வலர்கள்
குமாரபாளையம் அருகே தமிழக அரசு அறிவித்த 6 கோடி பனை விதை நடும் பணிக்காக, பனை விதைகள் சேகரிக்கும் பணியிலும், அதனை அரசு பள்ளிகளில் வழங்கும் பணியிலும் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டனர்.;
மாநில நாட்டு நலப்பணித்திட்டம் குழுமம் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நாமக்கல் மாவட்டம் சார்பாக 6 கோடி பனைவிதைகள் நடும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் அருகே வல்வில் ஓரி நண்பர்கள் குழுவினர், சமூக ஆர்வலர்கள், விடியல் ஆரம்பம் அமைப்பினர், தளிர்விடும் பாரதம் அமைப்பினர் பங்கேற்று பனை விதைகளை சேகரித்தனர். இது குறித்து சமூக ஆர்வலர் சித்ரா கூறியதாவது: குமாரபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி விஸ்வநாதன், அரசு திட்டத்திற்கு ஒரு லட்சம் பனை விதைகளை இலவசமாக தருகிறேன் என கூறியுள்ளார். அதற்கு பல தரப்பினர் பாராட்டி வருகிறார்கள்.மதுரை, தேனீ, கரூர், திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பல பகுதியிலிருந்து சமூக ஆர்வலர்கள், வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து பனை விதைகளை பெற்று செல்கின்றனர். கடந்த ஆண்டு மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் ஒரு கோடி பனை விதை நடும் திட்டத்தில் நாங்கள் குமாரபாளையம் பகுதியில் 20 ஆயிரம் பனை விதைகள் நட்டோம். தற்போது தமிழக அரசு அறிவித்த 6 கோடி பனை விதை நடும் பணியில், தற்போதைய கலெக்டர் துர்கா தலைமையில், மேலும் கூடுதலாக பனை விதைகள் நட ஏற்பாடுகள் செய்து வருகிறோம். கடந்த ஆண்டு நட்ட மரங்கள் யாவும் தற்போது நன்கு வளர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். குமாரபாளையம் தட்டாங்குட்டை பஞ்சாயத்து வீரப்பம்பாளையம் பகுதியில் 6 கோடி பனைவிதைகள் சேகரிக்கும் பணியிலும், அரசு பள்ளிகளில் பனை விதைகளை வழங்கும் பணியிலும் .சமூக ஆர்வலர்கள் சித்ராபாபு, விடியல் பிரகாஷ், உஷா, விஸ்வநாதன், அன்பழகன், பாஸ்கரன் உள்பட பலர்