பள்ளி விழாவில் கலந்து கொண்ட காவல் அதிகாரிகள்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்ற பள்ளி விழாவில் போக்குவரத்து உதவி ஆணையர் கலந்து கொண்டார்.;
மதுரை தெப்பக்குளம், தியாகராசர் நன்முறை மேனிலைப் பள்ளியில் செந்தமிழ்ச்செல்வர் கருமுத்து மாணிக்கவாசகம் அவர்களின் நினைவு நாள் பேச்சு,ஓவியப் போட்டிகள் மற்றும் தெய்வத்திரு சிந்தாமணி ஆச்சி நினைவு நாள் சிறப்புச் சொற்பொழிவு இன்று (அக்.13) பள்ளியில் நடைபெற்றது. தலைமையாசிரியர் அறிவழகன் தலைமை வகிக்க, பள்ளியின் முன்னாள் மாணவரும் இந்நாள் மதுரை வடக்கு சரகம் போக்குவரத்துப் பிரிவு காவல் உதவி ஆணையர் இளமாறன் வாழ்த்துரை வழங்க, பள்ளியின் பசுமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். உடன் திலகர் திடல் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் தங்கமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திருக்குறளை சுட்டிக்காட்டி மாணவர்கள் வாழ்வில் உயர்வதற்கான பல வழிவகைகளை நகைச்சுவையுடன் பேசினார். பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளில் மதுரையைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட பள்ளியிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுப் புத்தகங்களும் கேடயங்களும் வழங்கப்பட்டன. அதிக புள்ளிகள் பெற்று மகாத்மா சிபிஎஸ்சி பாபா பில்டிங் பள்ளி ஒட்டுமொத்தக் கேடயம் வென்றது.. பள்ளியின் தமிழாசிரியை கார்த்திகேஸ்வரி நன்றியுரை வழங்கினார். தமிழாசிரியர்கள் சாந்தி, சரவணன் ஆகியோர் விழாவைத் தொகுத்து வழங்கினார்கள்.