கோவை: மாணவர்களுக்கு அங்கக/இயற்கை வேளாண்மை பயிற்சி !

மாணவர்களுக்கு அங்கக வேளாண்மை விழிப்புணர்வு பயணம் நிகழ்ச்சி.;

Update: 2025-10-14 08:28 GMT
தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் மாவட்ட சுல்தான்பேட்டை வட்டாரப் பள்ளிகளின் 100 மாணவர்கள் களங்கல் கிராமத்தில் உள்ள செஞ்சோலை இயற்கை வேளாண் பயிற்சி மையத்திற்கு வந்தனர். மாணவர்களுக்கு பயிற்சி மைய நிறுவனர் திரு. செந்தில்குமரன் இயற்கை வேளாண்மையின் அறிவியல், முக்கியத்துவம், அங்கக வேளாண்மையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு, பயிர் சுழற்சி மற்றும் இடுபொருள் தயாரிப்பு முறைகள் குறித்து பயிற்சி அளித்தார். இத்தகவலுடன், அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள படிப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டன.

Similar News