அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி களப்பயணம்

அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி களப்பயணம் மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவங்கி வைத்தார்;

Update: 2025-10-14 08:33 GMT
இன்று அக்டோபர் 14, தருமபுரி மாவட்ட கல்வி துறை சார்பில் தருமபுரி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளியில், நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி களப்பயணம்-2025,தர்மபுரி மாவட்ட ஆட்சி தலைவர் ரெ. சதீஷ்,தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி MP ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர் இந்த நிகழ்வில் தர்மபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி மாது,நகர செயலாளர் நாட்டான் மாது,பெண்ணாகரம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் பச்சையப்பன்,தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கௌதம்,அரசுத்துறை அதிகாரிகள், நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Similar News