சூலூர்: வீட்டு கேஸ் கசிவு தீ விபத்து ஒத்திகை மூலம் விழிப்புணர்வு !

சூலூர் கல்லூரி வளாகத்தில் தீயணைப்புத் துறையின் பாதுகாப்பு ஒத்திகை: கேஸ் கசிவால் ஏற்படும் தீயை அணைக்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி.;

Update: 2025-10-14 08:38 GMT
உலகப் பேரழிவு குறைப்பு தினத்தையொட்டி, சூலூர் தீயணைப்பு நிலையம் சார்பில் கல்லூரி ஒன்றில் விழிப்புணர்வு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் என்.சி.சி. மாணவர்கள் கலந்துகொண்டனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகையில், திடீரென சமையல் எரிவாயு (கேஸ்) சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டால், பொதுமக்கள் பீதியடையாமல் அதை உடனடியாக கையாள்வது, அணைப்பது எப்படி என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாகச் செய்து காட்டினர். மாணவர்களும் தீயணைப்பு வீரர்களின் வழிமுறைகளைப் பின்பற்றி பயிற்சியெடுத்தனர். மேலும், எதிர்பாராத தீ விபத்துகளில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி, அத்தியாவசியப் பாதுகாப்பு வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்தும் செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்த ஒத்திகையில் வருவாய்த் துறையினர் மற்றும் பேரிடர் எதிர்ப்பு குழுவினரும் பங்கேற்றனர். இத்தகைய ஒத்திகைகள் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தைரியத்துடன் செயல்பட உதவும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

Similar News