வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி – பாதுகாப்பு கோரி தொழிலாளர்கள் மறியல் !

யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி – விலங்கு தாக்குதலை தடுக்க கோரி தொழிலாளர்கள் மறியல்.;

Update: 2025-10-14 09:55 GMT
கோவை மாவட்டம் வால்பாறை அருகே வாட்டர்பால்ஸ் உமையாண்டி முடக்கு பகுதியில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் குடியிருப்பு பகுதியில் புகுந்த ஒற்றை யானை தாக்கியதில் அசாலா (55) மற்றும் அவரது மூன்று வயது பேத்தி ஹேமாஸ்ரீ உயிரிழந்தனர். வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த யானை, வெளியே பார்த்த பாட்டி, பேத்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த அசாலா, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வனத்துறை அதிகாரிகள் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தையடுத்து, “ஒற்றை யானையை பிடித்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்; விலங்கு–மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரி தொழிலாளர்கள் பொள்ளாச்சி–வால்பாறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. உயிரிழந்த குழந்தையின் குடும்பத்துக்கு வனத்துறை சார்பில் ₹10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

Similar News