பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்
மதுரை அருகே மேலக்காலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.;
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமம் காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியதிலிருந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். இன்று (அக்.14) காலை 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வைகை ஆற்றிற்கு சென்று பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்கள். சிலர் கரும்புத் தொட்டில் கட்டியும், பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர்.