கீழ்வேளூர் 'பாவை' அலுவலகத்தில் உறுப்பினர்களுக்கு

தீபாவளி பரிசு வழங்க வைத்திருந்த வெடிப் பொருட்கள் பறிமுதல்;

Update: 2025-10-15 03:50 GMT
நாகை மாவட்டம் கீழ்வேளூரில், 'பாவை' குழுவினர் அனுமதி இல்லாமல் வெடிப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கீழ்வேளூர் தாசில்தார் கவிதாஸ் மற்றும் குழுவினர் 'பாவை' அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில், அதிகளவில் வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. வெடிப்பொருட்களை 'பாவை' உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக வழங்க திட்டமிட்டிருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். வெடிபொருட்களை பறிமுதல் செய்த தாசில்தார் கவிதாஸ், நிர்வாகிகளுக்கு உரிய அறிவுரைகளை கூறினார்.

Similar News