ஒகேனக்கலில் நீர்வரத்து சரிவு குளிக்க தடை நீட்டிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு, ஐந்தாவது நாளாக சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்க தடை நீட்டிப்பு;
தர்மபுரி மாவட்டம் கூத்தப்பாடி அருகே உள்ள ஓகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து கணிசமாக குறைந்துள்ளது. நேற்று (அக்.14) வினாடிக்கு 20000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் இன்று (அக்.15) புதன்கிழமை காலை 10 மணியளவில் 14,000 கன அடியாக குறைந்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஐந்தாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.