பெரியகுளம் தென்கரை பகுதியை சேர்ந்தவர் இனியவன் (33). இவர் குடி போதைக்கு அடிமையான நிலையில் அதன் காரணமாக இவருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத காரணத்தினால் மன வேதனையில் இருந்து வந்த இனியவன் நேற்று (அக்.14) வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.