கிணற்றில் மூழ்கி முதியவர் பலி

மதுரை திருமங்கலம் அருகே கிணற்றில் மூழ்கிய முதியவர் பலியானார்.;

Update: 2025-10-15 16:38 GMT
மதுரை கள்ளிக்குடி தாலுகா சின்ன உலகானி வடக்கு தெருவை சேர்ந்த சிவரக்கோட்டை விஏஓ மருதப்பன் ன்பவரின் தந்தை கருப்பு (65) என்பவர் சின்ன உலகானியில் கண்மாய் அருகே உள்ள தோட்டத்தில் தினமும் இரவு தங்கி தண்ணீர் பாய்ச்சுவிட்டு விடிந்ததும் வீட்டுக்கு வருவது வழக்கம். இந் நிலையில் தோட் டத்தில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கூடக் கோவில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் முதியவர் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News