கோவை: கஞ்சா விற்பனை செய்த ஒடிசா வாலிபருக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது !

கஞ்சா விற்பனை செய்த 22 வயதான சந்தீப் மீது மாவட்ட ஆட்சியர் உத்தரவால் குண்டர் சட்டம் பாய்ந்தது.;

Update: 2025-10-15 16:57 GMT
கோவை, மலுமிச்சம்பட்டி அருகே 6.3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் பெஹ்ரா (22) என்பவரை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர் மீது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தற்போது சிறையில் உள்ள சந்தீப்புக்கு அதற்கான ஆணை நகல் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News