கோவை அருகே பேருந்து - இருசக்கர வாகனம் மோதல்: பெரிய விபத்து தவிர்ப்பு!
இருசக்கர வாகனம் பேருந்தில் மோதல் – ஹெல்மெட் அணிந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.;
கோழிக்கோட்டிலிருந்து கோவையின் காந்திபுரம் நோக்கி வந்த கேரளா அரசு பேருந்து, உப்பிலிபாளையம் அருகே திடீரென பிரேக் அடித்ததால், பின்னால் வந்த இருசக்கர வாகனம் பேருந்தின் பின்புறத்தில் மோதியது. இளைஞர் ஓட்டிய இருசக்கர வாகனம் முற்றிலும் சேதமடைந்தாலும், ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர் காயமின்றி தப்பினார். சம்பவத்தால் சில நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.