கோவை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை !
ரயிலில் பட்டாசு உள்ளிட்ட தீப்பிடிக்கும் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை – அதிகாரிகள் எச்சரிக்கை.;
தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், கோவை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பொது போக்குவரத்து மூலம் எடுத்துச் செல்ல அரசு தடை விதித்துள்ளது. இதனை மீறி ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்லாமல் இருக்க பயணிகள் இடையே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கோவை ரயில் நிலையத்தில் போலீசார் பயணிகளின் பைகள் மற்றும் உடமைகளை சோதனை செய்து வருகின்றனர். யாரேனும் தடைசெய்யப்பட்ட பொருட்களுடன் பயணம் செய்தால், அவை பறிமுதல் செய்யப்படுவதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.