கோவையில் கனமழை: குளிர்ந்த சூழல் – மகிழ்ந்த பொதுமக்கள், பாதித்த வியாபாரம்!
சிறிது நேர மழையால் குளிர்ந்த கோவை – தீபாவளி விற்பனைக்கு இடையூறு.;
கோவையில் நேற்று பிற்பகல் முதலே பெய்த கனமழையால் குளிர்ந்த சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக வெயிலால் அவதிப்பட்ட பொதுமக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்தனர். தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அரபிக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் வியாபாரம் சுறுசுறுப்பாக இருந்த நிலையில், பிற்பகலில் பெய்த மழை காரணமாக விற்பனை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.