கோவை: இலவச சோஃபா விநியோகத்தால் கூடிய கூடம் !
தீபாவளி ஆஃபர் அதிர்ச்சி – இலவச சோபா பெற மக்களின் திரளான வருகை.;
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் கடையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக சோபா வழங்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை நான்கு மணி முதலே கடை முன் மக்கள் பெருமளவில் திரண்டனர். கூட்டம் அதிகரித்ததால் கடை நிர்வாகம் டோக்கன் வழங்கி, அதன்படி சோபாக்கள் விநியோகிக்கப்பட்டன. பெண்கள் உட்பட பலரும் சோபாவை மகிழ்ச்சியுடன் தூக்கிச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.