கோவை: அரசு மருத்துவமனையில் போதை ஆசாமிகளின் அட்டூழியம் !

ஆயுதங்களுடன் நுழைந்த போதை ஆசாமிகள் மீது நடவடிக்கை கோரி கோரிக்கை.;

Update: 2025-10-16 10:35 GMT
கோவை அரசு மருத்துவமனையில் ஆயுதங்களுடன் போதை ஆசாமிகள் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறும் இந்த மருத்துவமனையில், சமீபத்தில் சில போதை ஆசாமிகள் பெண்கள் வார்டுக்குள் சென்று செவிலியர்களிடம் தகராறு செய்தது சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது. பாதுகாப்பு ஊழியர்கள் அவர்களில் ஒருவரை பிடித்தபோது, கையில் ஆயுதம் இருந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் பாதுகாப்பு குறைவால், நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். ஆயுதங்களுடன் உள்ளே வரும் போதை ஆசாமிகளின் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News