கோவை: மருதமலைக்கு வாகனங்கள் செல்ல தடைவிதிப்பு!

கந்தர் சஷ்டி விழா முன்னெச்சரிக்கை: மலைப் பாதையில் வாகன நுழைவுக்கு தடை.;

Update: 2025-10-16 10:44 GMT
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் கந்தர் சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் நடைபெறவுள்ளன. இதையடுத்து அந்த நாட்களில் மலைக்கு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் செந்தில்குமார் இன்று தெரிவித்துள்ளார். பக்தர்கள் மலைப் படிகள் வழியாகவும் அல்லது கோவில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News